தற்கொலைக்கு முயன்ற நபர்... போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய பேஸ்புக் நிறுவனம்...

Facebook Delhi cyber crime
By Petchi Avudaiappan Jun 06, 2021 11:44 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

டெல்லியில் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவிலுள்ள பேஸ்புக் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும், அவரை காப்பாற்றும்படியும் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற நபர்... போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய பேஸ்புக் நிறுவனம்... | Fb Saved A Men Who Committed Suicide

இதுகுறித்து டெல்லி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராய் கூறுகையில், பேஸ்புக் நேரலை வீடியோவில் அந்த நபர் வீட்டின் உள்பக்கம் தாளிட்டுக் கொண்டார் என்றும், அவரது குழந்தை கதவை திறக்குமாறு வலியுறுத்தும் குரலும் கேட்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், தொழில்நுட்ப துறை வல்லுநர்களுக்கு தகவல் தெரிவித்து முகவரியை கண்டுபிடிக்கச் சொன்னதாகவும் துணை கண்காணிப்பாளர் ராய் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் டெல்லியில் உள்ள அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.