கடிதம் எழுதி வைத்து விட்டு ஓட்டம் பிடித்த நடிகர் விஜய்..!

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போன தகவலை அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1990-களில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக சினிமா வட்டாரத்தில் வலம் வந்தார். தற்போது நடிகராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் அவரது அப்பாவும் பேசிக்கொள்வதில்லை என தகவல் வெளியானது. அண்மையில் நடிகர் விஜய் அளித்த பேட்டியில் கடவுளுக்கு அடுத்தபடியாக அப்பா தான் எல்லாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதனைக் கேட்ட எஸ்ஏ சந்திரசேகர் எனக்கும் என் மகன் விஜய்-க்கும் எந்த பிரச்சனையும் இல்லை.எல்லா குடும்பங்களிலும் உள்ள ஒன்று தான் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது யூடியூப் சேனலான யார் இந்த எஸ்ஏசி என்ற சேனலில் தான் கடந்து வந்த பாதை மற்றும் தான் பட்ட அவமானங்களையும் உருக்கமாக பேசி வருகிறார்.
இதனிடையே ஒரு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அதில் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,தன்னுடைய பிடிவாதம்தான், தான் இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என்ற எஸ்ஏ சந்திரசேகர்,
தன்னுடைய ஜீன்தான் தனது மகனுக்கும் என்று விஜய்யின் பிடிவாதத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து, இன்று அவர் இருக்கும் இந்த இடத்திற்கு காரணம் அவருடைய அந்த பிடிவாதம்தான் என்று கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தனது அப்பாவிடம் கூறியுள்ளார் விஜய். ஆனால் அதனை ஏற்க மறுத்த எஸ்ஏ சந்திரசேகர், நீ படித்து டாக்டர் ஆகு, ஹாஸ்பிட்டல் கட்டி தருகிறேன் என்றாராம்.
இதனைக் கேட்ட விஜய் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். பின்னர் ஒரு நாள் என்னை தேடாதீர்கள் என கடிதத்தை எழுதி வைத்துவிட்டு திடீரென காணாமல் போய்விட்டாராம்.
ஒரே மகன் எங்கே போனாரோ? என்ன ஆனாரோ என பதறி தேடியுள்ளனர் அப்பாவும் அம்மாவும். பின்னர் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மகனை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.
சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருந்துதான் இன்று இப்படி ஒரு நடிகராக விஜய் உயரந்திருக்கிறார்.