ஸ்டெச்சரில் பாத்திமாபாபு - மருத்துவமனை சென்றது ஏன்?
நடிகை பாத்திமாபாபுவும் அவரது கணவர் பாபுவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து மீண்டு வந்தார்கள்.
ஆனால், மீண்டு பாத்திமாபாபு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஸ்டெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வந்தார் பாத்திமாபாபு.
அவரும் அவரது கணவரும் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் பாத்திமாபாபு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்படும் படங்கள் வெளியானது திரைத்துறையில் பேசு பொருளானது இந்த நிலையில் இது குறித்து பாத்திமாபாபுவே வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
[
கடந்த மே 1ம் தேதி எனக்கும் என் கணவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்தது. நான் ஐந்து நாட்களில் குணமாகிவிட்டேன்.
ஆனால், என் கணவர் குணமாகுவதற்கு 40 நாட்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி அன்று எனக்கு பின்பக்கத்தில் கடுமையான வலி.
பிறகு மருத்துமனையில் சேர்ந்து. அங்கு நடந்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்தது.
கல்லின் அளவு 7.8 மீட்டர் இருந்ததால் கடந்த 26ம் தேதி அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள்.
தற்போது நலமுடன் இருக்கிறேன்''எனதெரிவித்துள்ளார். மேலும்,தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் சிறுநீரக கல்லில் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.