பிரபல நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - முதியவர்கள் அலறி அடித்து ஓட்டம்

house snake shocking Fathima Babu
By Nandhini Dec 30, 2021 07:41 AM GMT
Report

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நல்ல பெயரை எடுத்தவர் பாத்திமா பாபு.

இவர் சென்னை போரூரில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு ஒன்றும் இருக்கிறது.

அந்த வீட்டை முதியோர் இல்லமாக நடத்தி வருகிறார் பாத்திமா பாபு. இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் உள்ளனர். இந்நிலையில், முதியவர்கள் தங்கி இருக்கும் பாத்திமா பாபுவின் வீட்டில் நேற்று முன்தினம் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது.

இந்தப் பாம்பைக் கண்ட முதியவர்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிறகு, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த வீட்டிற்குள் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர். இதனையடுத்து, அந்த வீட்டில் தங்கியிருந்த முதியவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.