மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - நீதிமன்றம் அதிரடி தண்டனை!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரள மாநிலத்தில் வளர்ப்பு மகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபரும் அவரது வளர்ப்பு மகளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்.
கடந்த 2016 ம் ஆண்டு முதல் தொடங்கி தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தந்தை தனது வளர்ப்பு மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது நண்பரிடம் சொல்லி அவரது ஆலோசனையின்படி,
நீதிமன்றம்
தனது தாயிடம் இதை பற்றி கூறியத்தின் பேரில் இந்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏஎம், போக்சோ,
ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றவாளிக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக 40 ஆண்டுகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.