2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - கொடூர பின்னணி
2 மகள்களை பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கர்நாடகா, சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தனது 2 மகள்களையும் திடீரென்று பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் 2 சிறுமிகளும், பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர்.
தந்தை கைது
அப்போது, தங்களது தந்தையே குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், இதுகுறித்து வெளியே கூறிவிடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து இருப்பதாகவும் தெரிவித்து அழுதுள்ளனர். உடனே மஞ்சுநாத்தின் தாயிடம் கிராம மக்களும், ஆசிரியர்களும் புகாா் தெரிவித்தனர்.

அந்த வேளையில் இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டில் இருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், மஞ்சுநாத்தை கைது செய்து தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.