விவாகரத்து கேட்ட மனைவி - 7 வயது மகனை கொலை செய்த தந்தை

italy fatherkilledson
By Petchi Avudaiappan Jan 10, 2022 05:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

விவாகரத்து கேட்ட மனைவியை பழிவாங்க 7 வயது மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலியின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்த டேவிட் பைடோனிக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். பைடோனிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் போலீஸ் நிலையத்தில் அவரின் மனைவி புகார் அளித்துள்ளார். 

மேலும் டேவிட் பைடோனிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் அவருடைய மனைவி விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார். மனைவியும், மகனும் தனியாக வசித்து வர அலுவலகத்தில் சக நண்பரை கத்தியால் குத்த முயற்சித்த வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் விவாகரத்து வழக்கின் போது கடந்த புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய 7 வயது மகனுடன் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட வேண்டும் என்பதால் என மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என டேவிட் பைடோனி வைத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி அதற்கு அனுமதி அளித்திருந்தார்.

சிறுவனோ  தனது தந்தையிடம் செல்ல மாட்டேன் என தனது தாயிடமும், தாத்தா, பாட்டியிடமும் கெஞ்சியுள்ளான். இருப்பினும் நீதிமன்றம் ஆணையிட்டதால் வேறு வழியின்றி அவனை சமாதானப்படுத்தி அவர்கள் தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த டேவிட் பைடோனி உடலை அலமாரியில் மறைத்து வைத்துவிட்டு தனது மனைவியின் வீட்டுக்கு சென்று மகனை திரும்ப அழைத்து வந்துள்ளேன் என கூறி வெளியே வரவழைத்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் பயந்து போன டேவிட் பைடோனி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இத்தாலி போலீசார் டேவிட் பைடோனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.