'வெல்கம் மேடம்' IAS ஆக வந்த மகளுக்கு சல்யூட் அடித்த எஸ்பி - நெகிழ்ச்சி சம்பவம்!
ஐ.ஏ.எஸ் ஆக வந்த தனது மகளுக்கு அவரது தந்தை சல்யூட் அடித்து வரவேற்றுள்ளார்.
உமாஹாரதி ஐ.ஏ.எஸ்
தெலங்கானா மாநில போலீஸ் அகாடமியில் துணை இயக்குனராக எஸ்.பி.வெங்கடேஸ்வரலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் உமாஹாரதி என்பவர் கடந்த 2022-ம் ஆண்டில் யூ.பி.எஸ்.சி தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தெலங்கானா மாநில போலீஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றார். அப்போது, தனது மகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வந்த மகிழ்ச்சியுடன், அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து, பூங்கொத்து கொடுத்து `வெல்கம் மேடம்’ என வரவேற்றார்.
நெகிழ்ச்சி சம்பவம்
மேலும், வெங்கடேஸ்வரலுவை அவரது மகள் `சார்’ என அழைத்தார். அதேபோன்று உமா ஹாரதியை அவரது தந்தை `மேடம்’ என அழைத்தார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர் இருவரும் போலீஸ் அகாடமி நிகழ்வில் சக அதிகாரிகளுடன் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தந்தையர் தினமான நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.