பள்ளிக்கு செல்லும் மகள்: சொகுசு காரை மாற்றிய தந்தை
துபாயில் தனது செல்ல மகள் முதன்முறையாக பள்ளிக்கு செல்வதற்காக தனது சொகுசு காரையே மாற்றிய தந்தையின் செயல் வைரலாகி வருகிறது.
ஈராக்கை சேர்ந்த தங்க வியாபாரி துபாயில் வசித்து வருகிறார், இவரது செல்ல மகள் தஹப்.
மகள் மீது அதீத பாசம் உண்டு, முதல் நாளன்று பள்ளிக்கு செல்லும் மகளுக்கு மறக்க முடியாத நாளாக மாற்ற நினைத்தார்.
இதற்காக Rolls Royce சொகுசு காரை தனியார் பள்ளி வாகனம் போல மாற்றிவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில், மகளுக்கு சொகுசு காரை முழுவதுமாக மாற்றிவிட்டார்.
காரின் மேற்கூரையில் ராட்சத வடிவ பென்சில், ஸ்கேல் எனவும் பக்கவாட்டில் நோட்டு புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் போன்றும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்.
தனது மகளின் பெயருடன் பிரத்யேகமாக மாற்றி வடிவமைக்கப்பட்ட காரில் மகளை பள்ளிக்கை அழைத்து சென்றார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாக உலகளவில் கவனத்தை ஈர்த்து விட்டது.
