மகனுடன் சேர்ந்து மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - பொதுமக்கள் அதிர்ச்சி

sexualviolance
By Petchi Avudaiappan Jan 19, 2022 11:53 PM GMT
Report

பள்ளிக்கு செல்லும் மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வருவதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மாணவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகாரளித்துள்ளார். 

அப்போது தனது தந்தையும், சகோதரனும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். தனக்கு நேர்ந்த அவலத்தை போலீசாரிடம் அந்த மாணவி விவரித்த நிலையில், தந்தை மற்றும் சகோதரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் வரும் ஜனவரி 22ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதே போல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்ற மகளை தந்தை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆடியோ வெளியான நிலையில்  பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் இதை கேள்விப்பட்டு நர்மதா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.