நிர்வாண வீடியோ வைத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல் - அப்பா மகன் சேர்ந்து செய்த சேட்டை
இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிடம் அப்பா மகன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கல்லூரி மாணவி
சமூக வலைத்தளங்களில் முன்பின் அறிமுகமாகாத நபர்களிடம் பேசி, பழகும் இளம் வயதினர் நாளடைவில் மோசடியில் சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி(23) விடுமுறை நாட்களில் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து சென்றார்.
வீடியோ கால்
அப்போது சுஜித் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக தொடங்கியுள்ளார். இளம்பெண்ணை சுஜித் காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து வீடியோ கால் பேசியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை நிர்வாணமாக வீடியோ கால் பேச சுஜித் அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்க, தன்னை காயப்படுத்திக் கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதன் பின் அந்த நிர்வாண வீடியோ கால் பேச அதை ரெகார்ட் செய்து வைத்து கொண்டு அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
தந்தை மகன் கைது
இவ்வாறாக இளம்பெண்ணை மிரட்டி இதுவரையில் சுமார் 5 லட்சம் ரூபாயை இளைஞர் பறித்துள்ளார். தற்போது மேற்கொண்டு ரூ.50,000 கொடுக்குமாறு கேட்டுள்ளார். தர மறுத்தால் வீடீயோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். சுஜித்தின் செயலுக்கு அவரின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சுஜித்(27) மற்றும் அவரது தந்தை வின்செண்ட் (55) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.