பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் - 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை

pakistan babygirlgunshot
By Petchi Avudaiappan Mar 10, 2022 05:18 AM GMT
Report

பாகிஸ்தானில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் - 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை | Father Shot 5 Times In 2Nd Baby Girl

என்னதான் சமூகம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைவதாக கருதப்பட்டாலும் பெண் குழந்தைகள் மீதான அடக்குமுறை, வன்முறைகள் குறைந்த பாடில்லை. பிறந்தது முதலே பல விதமான இன்னல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை பாதுகாக்க எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் அது முழுவதுமாக பயனளிக்கவில்லை என்பதே உண்மை. 

அந்த வகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜீப் என்பவருக்கு சமீபத்தில் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்து இருந்தவருக்கு இந்த நிகழ்வு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இதனால்  பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை ஷாஜீப் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றார்.இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரும் ஷாஜீப்புக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.