பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூர காரியம் - உடந்தையாக இருந்த சித்தி

chennai daughter sexual violence
By Petchi Avudaiappan Aug 30, 2021 07:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சொந்த மகளிடம் தகாத உறவு வைத்துக்கொண்டதாக தந்தை மற்றும் சித்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் இரு தினங்கள் முன்பு சோகமாக அமர்ந்திருந்த 14 வயது சிறுமியை பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்தனர். ஆனால் சிறுமி பதில் பேச மறுக்க அவரை மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்த குமாா் என்பவர் முதல் மனைவி இறந்த நிலையில் 2வது மனைவி கஸ்தூரியுடன் வசித்து வந்தார்.

இதனிடையே கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா், இரண்டாவது மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து சென்னை திருவொற்றியூர் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் தந்தை,சித்தி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தை குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றிகொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போஸ்கோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.