ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கியதால் நேர்ந்த விபரீதம் - தனது 6 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!
சூதாட்டத்தில் மூழ்கி கிடந்த தந்தை தனது 6 வயது மகளுக்கு செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன், 52 வயதான இவர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார், அதனால் இவருக்கு பல கடன் தொல்லைகள் இருந்துள்ளது.
இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக 2020ல் தற்கொலைக்கு முயற்சத்தார். அப்பொழுது இவரது மனைவி தூக்கிட்டுகொண்டார், இவரது மகள் குணாலினியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனம் மாறிய அவர் தற்கொலை செய்யும் முயற்சியை கைவிட்டுவிட்டு தனது 6 வயது மகளை தூக்கி சென்று தலைமறைவானார்.
தகப்பன் செய்த காரியம்
இந்நிலையில், அவர் தனது இளைய மகள் மானசாவுடன் வாழ்ந்து வந்தார், தற்பொழுது அவர் மீண்டும் இந்த சூதாட்டத்தில் மூழ்கி கடன் தொல்லை அதிகரித்ததால் நேற்று இரவு மகளின் கழுத்தை நெரித்து கொன்ற கீதாகிருஷ்ணன் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பணத்தை திருப்பி கேட்க வந்த ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர் பார்த்தபொழுது இருவரும் இறந்துகிடப்பது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த போலீசார் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விசாரணையில் அவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்ததாகவும், அவர்கள் வாழ்க்கை இந்த சூதாட்டத்தால் முடிவடைந்ததையும் அறிந்தனர்.