சேவலால் வெடித்த சண்டை - மகனை வெட்டிக்கொன்ற தந்தை
தந்தையே மகனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேவலால் வாக்குவாதம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள காவிரிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(25). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டில் சண்டை செய்வதற்கான சேவல்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சேவலை கட்டிப்போட்டு விட்டு வெளியேசென்ற ரஞ்சித், இரவு வீடு திரும்பி வந்து பார்த்த போது சேவல் வேறு இடத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், ஏன் சேவலின் இடத்தை மாற்றினீர்கள் எனத் தனது தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வெட்டிக்கொலை வாக்குவாதம்
முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், முனியாண்டி அவரது மகனான ரஞ்சித் குமாரை தேங்காய் வெட்டும் அரிவாளால் இடதுபுற மார்பில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரஞ்சித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ரஞ்சித்குமாரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தப்பி ஓடிய முனியாண்டி கைது செய்த சாணார்பட்டி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.