சொத்து தகராறால் மகள், மருமகனை இரக்கமின்றி கொன்ற தந்தை கைது
நெல்லையில் குடும்பத்தகராறு காரணமாக மகள் மற்றும் மருமகனை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் முத்து பாண்டி. இவருடைய மகன் சிறுத்தை என்ற செல்வம் இவருடைய மனைவி உச்சிமாகாளி என்ற மஞ்சு இவர்களுக்கு மணிகண்டன், முகேஷ் புவனேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
மஞ்சுவின் கணவர் செல்வம் பெண் கட்டிய தனது மாமனார் ஊரான நந்தன்தட்டை கிராமத்திலேயே தனது குடும்பத்துடன் குடி இருந்து வந்துள்ளார். சிறுத்தை செல்வத்தின் குடும்ப சூழ்நிலையை கருதி சிறுத்தை செல்வத்தின் மனைவி மஞ்சுவின் தந்தை புலேந்திரன், தன் மகள் மஞ்சுவின் மூன்று குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மஞ்சுவின் தந்தை புலேந்திரனுக்கும் மஞ்சுவின் கணவர் சிறுத்தை செல்வத்திற்கும் வீட்டிற்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை புலேந்திரன் வழக்கம்போல் தனது பேரக்குழந்தைகளை எடுத்து கொஞ்சி விளையாடி உள்ளார்.

இதை அறிந்து கோபம் அடைந்த சிறுத்தை செல்வம் ’எனது குழந்தைகளே நீ தொடக்கூடாது’ என மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மஞ்சு இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முற்பட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த புலேந்திரன் தனது வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மருமகன் என்று கூட பாராமல் செல்வத்தை சரமாரியாக வெட்டினார்.
இதை தடுக்க முற்பட்ட மகள் மஞ்சுவின் மீதும் சரமாரியாக வெட்டு விழுந்தது. வெட்டு விழுந்த இருவரும் நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பாப்பாகுடி காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேற்படி இரண்டு பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.