இன்று திருமணம்! மகனை வெட்டிக்கொன்ற கோபக்கார தந்தை! புதுமப்பிள்ளைக்கு நிகழ்ந்த கொடூரம்!
மதுரை வாடிப்பட்டி அருகே இன்று திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மணமகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அய்யனகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பிரதீப் சுமைதூக்கும் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் அவரது தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது தந்தை இளங்கோவனுக்கும், பிரதீப்புக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் 17 வயது சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பின்பு ஜாமினில் வெளிவந்த பிரதீப், ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணையே இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்யும் ஏற்பாடு நடத்தி கொண்டிருந்தார்.
இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று தந்தைக்கும், மகனுக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை கோடாரியால் மகனை துடிக்க துடிக்க வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தை இளங்கோவன் மகனை கொலை செய்துவிட்டதாக நேரடியாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.