இது என்ன மாதிரி இல்லை - பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர தந்தை

By Petchi Avudaiappan Oct 23, 2021 11:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

ஆந்திராவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தன்னுடைய சாயலில் இல்லாத 2 மாத பெண் குழந்தையை படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா, சிட்டம்மா தம்பதியினருக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

ஆனால் குழந்தை தன்னுடைய சாயலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலும் இல்லை. எனவே உன்னுடைய நடத்தை மீது சந்தேகம் எனக்கு உள்ளது என்று மல்லிகார்ஜுனா, அடிக்கடி தனது மனைவி சிட்டம்மாவுடன் தகராறு செய்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தையை அழைத்து கொண்டு 2 பேரும் மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். அப்போது அழுத குழந்தையை நான் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்ற மல்லிகார்ஜுனா அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சுத்திணற செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அந்த குழந்தையை பை ஒன்றில் வைத்து ஏரியில் வீசி விட்டான்.

குழந்தையுடன் கணவன் காணாமல் போனதால் சந்தேகமடைந்த சிட்டம்மா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனந்தபூரில் இருந்த  மல்லிகார்ஜுனவை கைது செய்து விசாரித்ததில் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.