சொத்தை கேட்ட மகனையே பணத்தை கொடுத்து கொலை செய்த தந்தை
தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்ட மகனை அவனது தந்தையே அடியாட்களுக்கு பணம் கொடுத்து கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேகர் என்கின்ற ராமசாமி (45). இவர் கடந்த 3ம் தேதி இரவு அவரது விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டதாக அவரது தந்தை நாச்சிமுத்து போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். ராமசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமானது. அனிதாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ராமசாமி தாய், தந்தையுடன் தான் வாழ்ந்து வருகிறார். அடிக்கடி ராமசாமி குடித்து விட்டு தந்தையுடன் சண்டை போடுவது வழக்கமாக வைத்து வந்தார். போதையில் சொத்தை கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை நாச்சிமுத்து அடியாட்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து மகனை காலை மட்டும் உடைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

ஆனால் அடியாட்களும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ராமசாமியை வழிமறித்து அடித்து கொலை செய்துள்ளார்கள். தந்தையிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் செய்த தப்பு அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து தந்தை நாச்சிமுத்து (71), அடியாட்கள் சதீஷ் (30), பிரவீன் (22), சக்தி(27), அருள் என்கிற பிரகாஷ்ராஜ் (24) ஆகிய ஐந்து பேரையும் சங்ககிரி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.