அதிவேகமாக வந்து கார்...கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியதில் தந்தை உயிரிழப்பு - மகன் படுகாயம்..!
கோவையில் தனது மகனை கபடி போட்டிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் மகன் கண் முன்னே தந்தை உயிரிழந்தார்.
மகனை அழைத்துச் சென்ற தந்தை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவர் தன்னுடைய மகன் அஜ்மலை (15) திருச்சி மாவட்டத்தில் நடக்கும் கபடி போட்டியில் பங்கு பெறுவதற்காக பயிற்சியாளரிடம் கொண்டு போய் விட தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தனது மகனை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய மகனுடன் கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி பகுதியில் ஜாகிர் உசேன் சென்றுகொண்டிருந்த நிலையில்,
தந்தை உயிரிழப்பு
அப்பகுதியில், அதிவேகமாக வந்த கார் பைக் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தந்தை (ஜாகிர் உசேன்) உயிரிழந்த நிலையில்,
அவருடைய மகன் (அஜ்மல்) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.