ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம் - பெற்ற குழந்தைகளை சுவரில் முட்ட வைத்து கொலை செய்த கொடூர தந்தை!!
ஆந்திரா அருகே ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் தன்னுடைய இரண்டு பெண்குழந்தைகளை கொலை செய்ய முயன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் பிரசாத் என்ற நபர் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார் . இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் பல வருடங்களாக இருந்து வந்தது .
அதனால் அவர் மனைவி ஒவ்வொரு முறை கர்ப்பிணியாக இருக்கும்போதும் ஆண் குழந்தைக்காக ஏக்கத்துடன் காத்திருப்பர். ஆனால் தொடர்ந்து அவரின் மனைவிக்கு இரண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மிக மன வேதனையடைந்தார் பிரசாத்.
இதன் காரணமாக அந்த குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி, பிரசாத்தின் மாமனார் வீட்டில் இரண்டு வயது குழந்தை மற்றும் அவரது 5 வயது அக்காவும் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த தந்தை பிரசாத், ஆத்திரத்தில் இரண்டு பெண் குழந்தைகளையும் சுவரில் முட்ட வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு வயது பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும் மற்றொரு குழந்தையோ
உயிருக்கு போராடி கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, கொடூர சைகோ தந்தையை
அதிரடியாக கைது செய்தனர்.