படுத்தப்படுக்கையாக கிடந்த 100 வயது தந்தை... - பாட்டுப்பாடி உற்சாகப்படுத்திய 75 வயது மகன் - நெகிழ்ச்சி வீடியோ...!
படுத்தப்படுக்கையாக கிடந்த 100 வயது தந்தையிடம் பாட்டுப்பாடி 75 வயது மகன் உற்சாகப்படுத்திய நெகிழ்ச்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பாட்டுப்பாடி உற்சாகப்படுத்திய 75 வயது மகன்
100 வயதாகும் தந்தை ஒருவர் படுத்தப்படுகையாக கிடக்கிறார். அவர் அருகில் வந்த 75 வயதாகும் மகன் தந்தையை உற்சாகப்படுத்த, தந்தையிடம் நான் விசில் அடித்து ஒரு பாட்டு பாடுறேன். அந்த பாட்டு என்ன பாட்டு என்று கரெண்ட்டாக கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கு 100 வயதாகும் தந்தையே தலையை சற்று அசைக்கிறார். உடனே, மகன் விசிலில் பாட்டு பாடுகிறார். இது என்ன பாட்டு என்று சொல்லுங்கள் என்று தந்தையிடம் கேட்க... பாட்டுப்பாட வா... என்று கரெண்ட்டாக கூறுகிறார்.
உடனே அருகில் இருந்த அனைவரும் சிரிக்கிறேன். உடனே, மகன் பாட்டுப்பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா... என்று அழகாக பாட்டுப்பாடு தன் தந்தையை உற்சாகப்படுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். தந்தை மேல் என்ன ஒரு அழகான அன்பு... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Father is 100+, son is 75. Can the coming generation sustain such relationships ? pic.twitter.com/QHhcqBSOnC
— Tweet-today?? (@goodpersonSrini) February 16, 2023