மகனை விவாகரத்து செய்ய திட்டமிட்ட மருமகள் - சுட்டு தள்ளிய மாமனார்
United States of America
By Thahir
அமெரிக்காவில் மருமகளை மாமனார் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகளை கொலை செய்த மாமனார்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்த வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவருடைய மாமனார் சீத்தல் சிங் தோசன்ஜ்.
சீத்தல் சிங் தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிவித்துள்ள காவல்துறை, கடைசியாக தனது மாமாவிடம் குர்பிரீத் சிங் தொலைபேசி வழியாக பேசியுள்ளார்.
பின்னர் அவரை மாமனார் சீத்தல் சிங் சுட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பிரெஸ்னோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.