மகன் பைக்கில் மருமகளோடு எஸ்கேப் ஆன மாமனார் - கதறிய கணவன்

Rajasthan Relationship
By Sumathi Apr 13, 2023 04:44 AM GMT
Report

மாமனாருடன், மருமகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மாமனாருடன் காதல்

ராஜஸ்தான் சிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பைராகி. இவரது மகன் பவன் பைராகி. இவருக்கு திருமணமாகி 6 மாத கைக் குழந்தை உள்ளது. இவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது.

மகன் பைக்கில் மருமகளோடு எஸ்கேப் ஆன மாமனார் - கதறிய கணவன் | Father In Law Ran With Daughter In Law Rajasthan

அதனால் வீட்டில் மனைவியும், தந்தையும் தனியாக இருக்கும் சூழலே நீடித்து வந்துள்ளது. அதில் மாமனாருடன் மருமகள் காதலில் விழுந்துள்ளார். அதனால் சில மாதங்களுக்கு முன் மருமகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கதறும் கணவன்

இதனையறிந்த மகன் அதிர்ச்சியடைந்து, போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், தன்னுடைய மனைவி நேர்மையானவர் என்றும், தன் மனைவியின் எளிமையான குணத்தை பயன்படுத்தி, தன் தந்தை, மனைவியை ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டார்.

தனது தந்தை மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்தார். மிரட்டி தனது பைக்குடன் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.