ஓட ஓட விரட்டி மாமனார் செய்த செயல் - பழங்குடியினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
பழங்குடியின பெண்ணுக்கு மாமனாரால் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் காதல்
தெலங்கானா, கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். வாகன ஓட்டுநராக உள்ள இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ராவணி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு சேகரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
மாமனார் வெறிச்செயல்
இந்நிலையில், சேகர் தன்னுடைய மாமியார், மாமனாருடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சேகரின் தந்தை சாத்தையா, மருமகள் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, றைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து திடீரென மருமகளை வெட்டப் பாய்ந்துள்ளார். அதில் கழுத்தின் பின் பகுதியில் வெட்டு பட்டுள்ளது.
பின் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராவணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் மாமனார் சாத்தையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.