மருமகளை ஓட ஓட அடித்த மாமனார்; பதறிய அக்கம்பக்கத்தினர் - பகீர் சம்பவம்

Kerala
By Sumathi Apr 15, 2023 04:54 AM GMT
Report

மருமகளை, மாமனார் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறு

கேரளா, பரசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.

மருமகளை ஓட ஓட அடித்த மாமனார்; பதறிய அக்கம்பக்கத்தினர் - பகீர் சம்பவம் | Father In Law Chased And Beat Daughter In Law

இவர் வீட்டில் அவரது மகனும், மருமகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டை மகனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், மருமகள் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி ராமச்சந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

ஆத்திரம்

அதனை தட்டிக் கேட்ட மருமகள் பிரேமலதா, ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், மருமகளை ஓடவிட்டு சரமாரியாக தாக்கினார். இதுகுறித்த வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.