இறந்த மகன்: 28 வயது மருமகளை கல்யாணம் செய்த 70 வயது மாமனார்!

Uttar Pradesh Marriage Viral Photos
By Sumathi Jan 27, 2023 05:30 AM GMT
Report

மகன் இறந்துவிட்டதால் மருமகளை, மாமனார் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமனார் திருமணம்

உத்தரப்பிரதேசம், சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ்(70). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி இறந்துவிட்டார். தொடர்ந்து, 3வது மகனும் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

இறந்த மகன்: 28 வயது மருமகளை கல்யாணம் செய்த 70 வயது மாமனார்! | Father In Law And Daughter In Law Married In Up

இந்நிலையில், இவர் தனது மருமகள் பூஜாவை(28) கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 பரபரப்பு

அதனையடுத்து இதுகுறித்து அறிந்த காவல்நிலைய அதிகாரி, புகைப்படத்தின் மூலம் தான் இந்த திருமணம் குறித்து எங்களுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும்

இது இருவருக்கு இடையே உள்ள பரஸ்பர விவகாரம் என்றும், யாருக்கேனும் புகார் இருந்தால், போலீசார் விசாரணை நடத்துவார்கள் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.