தனது ஒரு வயது மகனின் தலையை துண்டித்து கொன்ற தந்தை - அதிர்ச்சி பின்னணி!
மகனின் தலையை துண்டித்து தந்தையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன்
அமெரிக்கா மாகாணம் கலிஃபோர்னியாவில் சாக்ரமென்டோ கவுண்டி நகரை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், புகார் அளித்த பெண்ணின் இருப்பிடத்துக்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், ஆண்ட்ரி டெம்ஸ்கி என்பவர் அவரது மனைவியையும், மாமியாரையும் குடும்பத் தகராறு காரணமாகத் தாக்கியுள்ளார் என தெரியவந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மாமியார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.மேலும், அந்தப் பெண்ணை வீட்டுக்கு வெளியே தள்ளி, தனது குழந்தையுடன் வீட்டில் இருப்பதாகவும் பெண் கூறியுள்ளார்.
தந்தை
இதை தொடர்ந்து, தனது ஒரு வயது குழந்தையையும் ஆண்ட்ரி தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருப்பதாக அந்த பெண் பதற்றத்துடன் போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து, வீட்டின் கதவைத் திறக்குமாறு ஆண்ட்ரியை காவல் அதிகாரிகள் வற்புறுத்தினர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால், அதிரடியாக காவல் அதிகாரிகள் வீட்டினுள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நுழைந்த காவல் அதிகாரிகள், குழந்தையைத் தேடினர். அப்போது,படுக்கையறைக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், ஆண்ட்ரி மீது கொலை, மனைவி மீதான தாக்குதல் உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாமீன் இல்லா கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆண்ட்ரியை கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர்.