9ஆம் வகுப்பு மாணவனுக்கு BMW கார் பரிசு.., தந்தையின் செயலால் வெடித்த சர்ச்சை
Father gifts bmw to class 9 student- ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, அவரது தந்தை பிஎம்டபிள்யூ சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
BMW கார் பரிசு
மேற்கு வங்க மாநிலம், கல்சா அருகே உள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த முகமது தல்ஹா என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு நீண்ட நாட்களாக பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதையறிந்த அவரது தந்தை ஷம்சுதீன் மித்யா, அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பிஎம்டபிள்யூ கார் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன்படி, மாணவரும் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து, மகனின் ஆசையை நிறைவேற்ற அவரது தந்தை முடிவு செய்தார்.
இதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்குச் சென்ற அவர், அந்தேரி பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமில் காரை வாங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனது மகனுக்கு பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, 16 வயது சிறுவனுக்கு இவ்வளவு விலை உயர்ந்த காரைப் பரிசாக வழங்கியது சரியான முடிவு இல்லை எனப் பலர் விமர்சித்துள்ளனர்.
மேலும், பல இடங்களில் சிறுவர்கள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.