12 வயதில் கடத்தப்பட்ட மகனை தேடி 24 ஆண்டு பயணம்! இறுதியில் தந்தையின் பாசப்போராட்டம் ஜெயித்ததா?
சீனாவில் 12 வயதில் தொலைத்த மகனை 24 ஆண்டுகள் அலைந்து கண்டுபிடித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஷண்டோங் Shandong மாநிலத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்ற விவசாயி ஒருவரின் மகன் 1997ம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.

அன்று முதல் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, இருச்சக்கர வாகனத்தில் மகனின் புகைப்படத்தை அச்சிட்டு, தேடும் பணியை தொடங்கியுள்ளார்.
24 ஆண்டுகளில் 20 மாநிலங்கள் மகனை தேடி அலைந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் தன் பணத்தையும், வாழ்க்கையும் மகனை தேடும் பணியிலே கழித்துள்ளார்.

குவோவின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் அறியப்பட்டதால் சீனாவில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பில் இந்த கதை திரைப்படமாக வெளிவந்தது.
இதையடுத்து காவல்துறை தீவிர முயற்சி எடுத்து குவாவின் மகனை மீட்டு கொடுத்திருக்கிறது. மரபணு சோதனைகள் மூலம் குவாவின் மகனை அடையாளம் கண்டுள்ளனர் காவல்துறையினர்.

விசாரணையில், மகனை ஒரு பெண் கடத்தி
பக்கத்து மாநிலமான ஹீனானில் விற்றுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகனை கண்டதும், ஓடி வந்து கட்டியணைத்து அழுது கதறியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.