அப்பாவின் கனவை நனவாக்குவேன் - விஜய் வசந்த் நம்பிக்கை
தமிழகத்தின் கன்னியாகுமர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்த குமார் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பினாள் உயிரழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலோடு கன்னியாகுமர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் கன்னியாகுமர் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இந்த இடம் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமர் இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். அப்பாவின் கனவை நனவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி சார்பில் பாஜக கன்னியாகுமரி இடைத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருக்கிறது.