பெண் சடலத்தை சூட்கேஸுக்குள் வைத்து கொண்டு வந்த தந்தை, மகள் - விசாரணையில் திடுக் தகவல்!
ஓடும் ரயிலில் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளுடன் 2 சூட்கேஸ்களுடன் சென்னை நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தடைந்தது .
அப்போது ரயிலிலிருந்து அவசர அவசரமாகத் தந்தையும், மகளும் இறங்கினர்.அப்போது தாங்கள் கொண்டு வந்த சூட்கேஸை நடைமேடையில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே காவல்துறையினர் இருவரையும் மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு அவர்கள் கொண்டு வந்த சூட்கேஸை சோதனை செய்தனர்.அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது 17 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால்,
கொலை
ஆத்திரத்தில் தனது மகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.மேலும் இந்த சடலத்தை அப்புறப்படுத்த மீஞ்சூர் ரயில் நிலையம் வந்ததாக அந்த நபர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் கைது செய்த காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.