தந்தையின் மெழுகுசிலை முன்பு திருமணம்: கண்ணீர் விட்ட மணமகள்- நெகிழ்ந்து போன உறவினர்கள்

father trichy tearful relatives
By Jon Apr 01, 2021 11:06 AM GMT
Report

திருச்சியில் இறந்து போன தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் நடந்ததால் மணமகள் கண்ணீர் விட்டழுத நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி மல்லிகா. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் ராஜேந்திரன் காலமானார், இந்நிலையில் இவரது மூத்த மகளான ஜெயலட்சுமிக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் தந்தை இல்லாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஜெயலட்சுமி.

தந்தையின் மெழுகுசிலை முன்பு திருமணம்: கண்ணீர் விட்ட மணமகள்- நெகிழ்ந்து போன உறவினர்கள் | Father Candle Marriage Tearful Flexible Relatives

இந்த குறையை போக்க மல்லிகா குடும்பத்தினர் ரூ.3 லட்சம் செலவில் ராஜேந்திரனின் மெழுகு சிலையை தயாரிக்க பெங்களூருவில் ஆர்டர் கொடுத்தனர்.

தத்ரூபமாக உருவாக்கப்பட்ட தந்தையின் மெழுகு சிலை முன்பு, திருமண சடங்குகள் நடத்தப்பட்டு ஜெயலட்சுமியின் திருமணம் நடந்தது. பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமண தம்பதியினரை பார்த்து உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.