தந்தை மற்றும் அண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 17 வயது சிறுமி
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிறுமியின் தந்தை மற்றும் அண்ணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி பரபரப்பு புகார்
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அவரது தந்தை மற்றும் அண்ணண் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை யாரிடமாவது சொன்னால் தன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது பள்ளிக்கு சென்று தனது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து தனது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் உதவியுடன் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் தந்தை, மற்றும் அண்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.