கொடூர தாக்குதலால் இளம்பெண் ஆணவக்கொலை - தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை
இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆணவக்கொலை
பாகிஸ்தான், கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் மரியா பீபி. இவரை அவரது தந்தையும், அண்ணனும் சேர்ந்து குடும்ப விவகாரம் தொடர்பாக சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்த மரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இதுதொடர்பாக எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
[E7LY7NA
தூக்கு தண்டனை
ஆனால், மரியாவை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் அடிப்படையில், ஆணவக்கொலை செய்ததாக போலீசார் அவர்களை கைது செய்து செய்தனர்.
கடந்த ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு உறுதியானதால் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.