வீட்டுக்கு அழைத்து காதலனின் பிறப்புறுப்பை கடுமையாக தாக்கிய பெண்ணின் தந்தை - பரபரப்பு சம்பவம்

exciting-incident பரபரப்புசம்பவம் father-attacked-the-boyfriend காதலனைதாக்கியதந்தை
By Nandhini Apr 19, 2022 10:27 AM GMT
Report

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, காதலன் ஸ்ரீகாந்த்திற்கு தொடர்பு கொண்டு மகள் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டாள். வீட்டிற்கு வாப்பா.. என்று நைஸாக பேசி ஸ்ரீகாந்த்தை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த ஸ்ரீகாந்த்தை, பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஒரு இருட்டு அறையில் உலக்கை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். ஸ்ரீகாந்தின் பிறப்புறுப்பை தாக்கி கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஸ்ரீகாந்த் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்து பயந்த அவர்கள் ஸ்ரீகாந்தை ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் ஸ்ரீகாந்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீகாந்த் நடந்ததை மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவர்கள் போலீசிடம் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்திடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

வீட்டுக்கு அழைத்து காதலனின் பிறப்புறுப்பை கடுமையாக தாக்கிய பெண்ணின் தந்தை - பரபரப்பு சம்பவம் | Father Attacked The Boyfriend Exciting Incident