4வது மனைவியின் மகள் வன்கொடுமை செய்த தந்தை கைது
வாணியம்பாடியில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் பாரதி. இவரின் முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து செல்ல மூன்றாவதாக ஒரு பெண்ணை பாரதி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதனிடையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக சென்னையில் இருந்த போது அங்கு 2 குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாரதி மொத்தம் 8 குழந்தைகளின் தந்தை ஆவார்.
இந்நிலையில் 4வது மனைவியின் வீட்டில் முதல் மனைவியின் 2 குழந்தைகள், 2 வது மற்றும் 3 வது மனைவியின் குழந்தைகள் மற்றும் 4 வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகள் மற்றும் மகன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது உறங்கிக்கொண்டிருந்த 4வது மனைவியின் 11 வயது மகளை பாரதி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து 11 வயது சிறுமி அவரது தாயிடம் நடந்ததை தெரிவித்ததன் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.