மகளை ஆபாச படம் பார்க்க சொல்லி துன்புறுத்திய தந்தை, சித்தப்பா.. கொடூர சம்பவம்!
தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ஆபாச படங்கள் பார்க்கச் சொல்லி தந்தையும் அவரது சகோதரரும் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கொல்கத்தா, தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியைச் சேர்ந்தவர் இந்த சிறுமி. இவர் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வரும்
அந்த சிறுமியை ஆபாச படம் பார்க்கச்சொல்லி தந்தையும், சித்தப்பாவும் மிரட்டி வந்திருக்கிறார்கள். மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்திருக்கிறார்கள். அதை பெற்ற தாயின் கண் முன்னேயே செய்திருக்கிறார்கள்.
தந்தையும், சித்தப்பாவும் கைது
இதுகுறித்து மிரட்டியதால் அவரது தாய் பயத்தில், போலீசிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இந்த கொடுமை அதிகமாகவே, தாய் போலீசிடம் புகாரளித்துள்ளார்.
புகாரில்தான் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஒன்றை வயது பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள் சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும்... அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில்,
கணவரும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.