சாத்தான் குளம் கொலை வழக்கில் தந்தை மகன் கொடூரமாக தக்கப்பட்டனர் : சிபிஐ தகவல்
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என 9 பேரை கைது செய்தனர்.
மேலும்,இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில்,சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும்,காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தரப்பு வாதிட்டுள்ளது.
குறிப்பாக,சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ்-க்கு பிணை வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது.இதனைத் தொடர்ந்து,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.