தந்தையை காண மருத்துவமனைக்கு சென்ற மகன்! அங்கு அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை காண மகன் சென்ற நிலையில், 4 நாட்களுக்கு முன்பே அவர் இறந்தது தெரியவந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அலகாபாத்திலுள்ள துமன்கன்ச் பகுதியை சேர்ந்தவர் லால் ஸ்வரூப், தனது தந்தையை சிகிச்சைக்காக அலகாபாத்தின் ஸ்வரூப் ராணி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி முதல் தினந்தோறும் தந்தையை காண, லால் ஸ்வரூப்பை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி தந்துள்ளனர்.
எனினும் தினமும் தந்தைக்கு தேவையான உணவு, பழங்களை அனுப்பி வைத்துள்ளார், இந்நிலைியல் சமீபத்தில் தந்தையை லால் ஸ்வரூப் பார்க்க சென்ற போது, அவரது படுக்கையில் வேறு ஒருவர் இருந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்த ஊழியர்களிம் விசாரித்த போது, வேறொரு வார்டுக்கு மாற்றியதாக தெரிவித்தனர், அங்கு சென்ற போதும் தந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, லால் ஸ்வரூப்பின் தந்தை 4 நாட்களுக்கு முன்பே இறந்ததும், அனாதை என கருதி மருத்துவமனையே இறுதிச்சடங்குகளை செய்ததும் தெரியவந்தது.
தந்தையை காணச்சென்ற மகனுக்கு அவரது இறப்பு சான்றிதழை மருத்துவமனை வழங்கியதால், அப்பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.