மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! கள்ளக்காதலியின் மகளை சீரழித்த கொடூரம்!

daughter andra father abuse
By Anupriyamkumaresan Jul 22, 2021 10:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

ஆந்திராவில், அடுத்தவர் மனைவியோடு குடும்பம் நடத்தி, அந்த பெண்ணின் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர அரக்கனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! கள்ளக்காதலியின் மகளை சீரழித்த கொடூரம்! | Father Abuses Daughter In Andra

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், 35 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து அவரது மகன், மகளோடு தனியாக வசித்து வருகிறார்.

அதே பகுதியில் மனைவியை பிரிந்து ஒரு வாலிபரும் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால், சிறுது நாட்களில் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது அந்த குழந்தைகளுக்கு தந்தையாக இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார். பிள்ளை போல் வளர்த்து வந்த கள்ளக்காதலியின் 14 வயது மகள் மீது தீடீரென அவருக்கு ஆசை வந்துள்ளது.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! கள்ளக்காதலியின் மகளை சீரழித்த கொடூரம்! | Father Abuses Daughter In Andra

இதனால் அந்த சிறுமியை மிரட்டி கடந்த ஆறு மாதமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் இதே போன்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போது, அவரது 10 வயதுடைய தம்பி இதனை பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

இதனை கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வளர்ப்பு தந்தை மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.