கிரே பட்டியலில் தொடரும் பாகிஸ்தான் : மீண்டும் சிக்கலில் பாகிஸ்தான்?

pakistan greylist faft
By Irumporai Oct 22, 2021 05:51 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பயங்கரவாதத்திகள் தொடர்ந்து நிதி அளித்துவருவதால்   சர்வதேச நிதி நடவடிக்கை அமைப்பின் மிக  மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு, செயல்படும் எஃப்.ஏ.டி.எஃப் என்ற சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகின்றது. 

இந்த அமைப்பு ,பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகம்  உள்ளது என்பதை கண்காணித்து, அந்த நிதியுதவிகளை தடுக்கும் வேலைகளை இது செய்யும்.

ஒரு வேளை அந்த நாடுகள் எஃப்.ஏ.டி.எஃப்  கட்டளையை நிறைவேற்றவில்லையென்றால்  சம்பந்தப்பட்ட நாடுகளை 'கிரே பட்டியல்' என்றழைக்கப்படும் மோசமான பட்டியலில் வைத்திருக்கும்.

கிரே பட்டியலில் தொடரும் பாகிஸ்தான் : மீண்டும் சிக்கலில் பாகிஸ்தான்? | Fatf Retains Pakistan On Its Grey List

அவ்வாறு கிரே பட்டியலுக்கு செல்லும்  நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

அந்த வகையில்  கடந்த 2018 ஆம் முதல் பாகிஸ்தான் கிரே பட்டியலில் உள்ளது, இந்தியாவால் தேடப்படும் ஜெயஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆகியோருக்கு நிதியுதவி தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான 30 வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்  எஃப்.ஏ.டி.எஃப் கூறியிருந்தது, அதில் 26 நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாத காரணத்தினால், தொடர்ந்து மோசமான நாடுகளின் பட்டியலிலேயே பாகிஸ்தான்  நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது