தெரிந்தது பிறை : ரமலான் நோன்பு தொடக்கம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
தமிழ்நட்டில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது . மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான். ரமலான் மாத தொடக்கத்தில் வானில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
ரம்ஜான் நோன்பு
நோன்பு முடிந்து மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
சிறப்பு தொழுகை
பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். வானில் பிறை பார்த்து நோன்பு தொடங்கப்படும் நிலையில் நேற்று ரமலான் நோன்பு தென்படவில்லை.
இருந்தபோதிலும், ரமலான் நோன்பு 24-ந்தேதி (இன்று) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் நோன்பை தொடங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.