சாகும் வரை உண்ணாவிரதம்.. பிரிட்டன் அரசின் முடிவுக்கு எதிராக போராடும் அம்பிகை
இலங்கை அரசு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் ஒப்புக்கொண்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகியது. இதன்மூலம் ஐ.நாவிற்கு பொறுப்பு கூறும் கடமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டனர் ராஜபக்சேக்கள். இந்நிலையில் சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையர் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அப்போது போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது. இதில் இலங்கைக்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்க இருக்கின்றன.
இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டன் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கையை ஆதரிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் பிரிட்டன் வாழ் தமிழர் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய சிறப்பு நேர்காணல்