வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்...இந்தியாவிலும் பரவ வாய்ப்பா?

‎Monkeypox virus
By Thahir May 21, 2022 05:24 AM GMT
Report

குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் பீதி காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்கவும்,கண்காணிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் இருந்து வரும் பயணிகளின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்...இந்தியாவிலும் பரவ வாய்ப்பா? | Fast Spreading Monkey Measles Disease

விமானங்கள்,துறைமுகங்கள் மற்றும் நிலம் வழியாக எல்லைகள் வழியே பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பியாவில் 100க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பரவியதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகிறது.

ஜெர்மனியில் மிக அதிகமாக பரவிய நிலையில் பிரிட்டன்,போர்சுக்கள்,இத்தாலி,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது.