5 நாட்களில் ரூ.1,184 கோடி... ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் சாதனை...

fast and furious 9
By Petchi Avudaiappan May 27, 2021 05:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

பிரபல ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் 9 ஆவது பாகம் வெளியான 5 நாட்களில் வசூலில் சாதனை படைத்துள்ளது.

கொரோனா காரணமாக பல்வேறு திரைப்படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகன பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை புரிந்து இருந்தது.

இதன் 9வது பாகத்தை ஜஸ்டின் லின் இயக்க இந்த படத்தில் மிச்சல் ரோட்ரிகெஸ்,டீசல், ஜான் சீனா, டைரீஸ் கிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பரவல் தற்போது பரவி வருவதால் பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சீனா, ஹாங்காங், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டும் கடந்த மே 19 ஆம் தேதி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் வெளியானது.

இந்த படம் 5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.