சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஃபேஷன் டிசைனர்! நடந்தது என்ன?
தெலுங்கு திரையுலகின் பிரபல பேஷன் டிசைனர் பிரத்யுஷா அவரது பஞ்ஜாரா பகுதி வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரத்யுஷா காரிமெலா
தெலுங்கு திரையுலகின் பிரபல ஃபேஷன் டிசைனர் பிரத்யுஷா காரிமெலா. இவர் ஹைதரபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் இன்று அவரது அபார்ட்மெண்டில் உள்ள அவரது குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மன அழுத்தம்
அவரது அறையில் இருந்து கார்பன் மோனாக்சைடை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால், அவர் அதை சுவாசித்த காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும்,
இது தற்கொலை முடிவாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி, உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரத்யுஷா அமெரிக்காவில் மாடலிங் படித்தவர். அவரது பெயரிலே 2013-ஆம் ஆண்டு முதல் அவர் பேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பேஷன் டிசைனராக பிரத்யுஷா இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் எப்போதுமே ஃபேஷன் மீது விருப்பத்துடன் இருந்திருக்கிறேன்.
ஆனால் அதையே எனது தொழிலாக மாற்றவேண்டும் என நான் நினைக்கவில்லை. எனது நண்பர்கள் இதையே தொழிலாக மாற்றிக்கொள்ள வலியுறுத்தினார்கள் என தனது
சமீபத்திய பேட்டியில் பிரத்யுஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரத்யுஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.