சீமான் போன்ற பாசிச சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் – சுப. உதயகுமார் ஆவேசம்!
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை பலர் வரவேற்றுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளிகளில் ஒருவர்தான் சுப.உதய குமார். இந்த வாக்குறுதிக்காக அவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதனால் சுப.உதயகுமாரையும், அவருடைய ஆதரவாளர்களையும் நாம் தமிழர் கட்சியினர் திட்டி வருகிறார்கள். இதனால் கடும் கோபமடைந்த உதயகுமார் இது குறித்து பேசுகையில், “என்னுடைய, என்னோடு நின்று போராடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடுத் தொடர்புடைய ஒரு பிரச்சினையில் ஓர் அரசியல் தலைவர் எங்களுக்குச் சாதகமான முடிவை அறிவித்திருக்கிறார்.
அதற்காக நன்றி மட்டுமேதான் நான் தெரிவித்துள்ளேன். அதனை எதிர்த்து பிரச்சினையாக்குகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

ஆரம்பத்தில் என்னைப் போலவே தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் என்று நான் சீமானை நினைத்தேன். ஆனால் போக போக நாம் தமிழர் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சினிமா ரசிகர் மன்றம், சிந்தனைக்கே இடமில்லாத ஒரு வழிபாட்டுக் கூட்டம். சீமான் போன்ற பாசிச சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்றார்.