பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 60,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதே சமயம் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 6 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரின் மகன் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.