அறவழிப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - திருமாவளவன்

Announcement Modi Thol. Thirumavalavan Farms Law
By Thahir Nov 19, 2021 06:17 AM GMT
Report

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பு அறவழிப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓராண்டை அடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

அப்போது அவர், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் அறிவிப்பு பல்வேறு கட்சி தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொல்.திருமாவளவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்திய விவசாயிகளின் ஒராண்டு கால தொடர் அறவழிப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம் என அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.